நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 651 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்; கோ.லட்சுமிபதி அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் நிலம் வாங்குவதற்கு 1 பயனாளிக்கு மானியத்தொகை ரூ.5,00,000/-க்கான காசோலையையும், 10 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார்.
முன்னதாக, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெறுவதற்கான ஆணையை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.