தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் கெடாமுட்டுப் போட்டி நடைபெற்றது.
உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் கெடாமுட்டுப் போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா 495 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கெடாமுட்டு போட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளாக இன்று கெடா முட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடாக்கள் பங்கேற்றன.இதில் கிடாக்கள் வயதிற்கேற்ப ஒரு பல் 2பல் 3பல் என தரம் பிரிக்கப்பட்டு மோத விடப்பட்டன.மொத்தம் 72 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன.கெடாக்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.போட்டியில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பித்தளை அண்டா காசு பானை சில்வர் பானை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.கிடா முட்டு போட்டியை முன்னிட்டு அப்பகுதியில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story