திருச்செங்கோட்டில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா வரும் 16ஆம் தேதி பூச்சாட்டுத்துடன் துவங்கியது. 15 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இவ்வாறு காப்பு கட்டிய பக்தர்கள் மலையடி குட்டையில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தீர்த்தமெடுத்து வந்தனர். தீர்த்தமாக எடுத்து வந்த புனித நீரைகொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.நாளை வெள்ளிக்கிழமை அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைவார்கள் தொடர்ந்து 108 சங்காபிஷேகம், பூச்சொரிதல் ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடக்க உள்ளது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.