தை அமாவாசை கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு

தை அமாவாசை கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு

தூத்துக்குடியில் தை அமாவாசை கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடியில் தை அமாவாசை கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி தை அமாவாசை தினத்தை முன்னிட்டு புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்தனர் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம் இதன் காரணமாக தை அமாவாசை ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் தர்ப்பணம் வழங்குவது வழக்கம் அந்த வகையில் தை அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் குவிந்தனர் பொதுமக்கள் கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர் பின்னர் ஆலயம் சென்று வழிபாடு செய்தனர்.



Tags

Next Story