கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டல்!

கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டல்!

பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தில் கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலத்தில் கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டிலேயே கடை நடத்தி வருகின்றார். கடந்த 12-ந் தேதி இரவு 8 மணிக்கு கடையை மூடிவிட்டு சந்திரசேகர் பள்ளிகொண்டா சந்தைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அதே கிராமத்தில் உள்ள காலனி பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் குடி போதையில் சந்திரசேகர் வீட்டின் கதவை தட்டி தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு ஜெயலட்சுமி கடையை மூடிவிட்டதால் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

உடனே அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இதுகுறித்து ஜெயலட்சுமி கணவர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த சந்திரசேகரையும், அந்த வாலிபர்கள் திட்டி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து சந்திரசேகர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Read MoreRead Less
Next Story