பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்: மகன் கைது

கோப்பு படம் 

கோவில்பட்டியில் பணம் கொடுக்காததால் தாயை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த ஆறுமுகத்துரை மனைவி சாந்தி. இவரது மகன் ராஜதுரை (29). மதுப் பழக்கமுடைய ராஜதுரை சம்பவத்தன்று இரவு தாயிடம் பணம் கேட்டாராம். பணம் கொடுக்க மறுத்ததால் தாயை,

அவதூறாகப் பேசியதுடன் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினாராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ராஜதுரையை கைது செய்தனா்.

Tags

Next Story