டிரைவரை தாக்கிய மூன்று பேர் கைது

செய்யாறு அருகே டிரைவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் வயது 43 தனியார் பஸ் கண்டக்டர் இவர் கடந்த 25 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் டிரைவர் ராமதாஸ் என்பவருடன் வந்தவாசி சாலையில் உள்ள ஞானமுருகன் பூண்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்தச் சென்றார் முன்னதாக அருகில் உள்ள பெட்டிக்கடையில் கண்டக்டர் குமார் வாட்டர் பாட்டில், கொசுவத்தி சுருள் வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சேர்ந்த ஜனா (21) அஜித் (21) கல்லூரி மாணவர் சிவகுமார் (19) ஆகியோர் குமாரிடம் வீண் தகராறு செய்தனர். மேலும் அவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதுடன் அருகில் இருந்த ரிப்பர் சட்டத்தால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனை தடுத்த டிரைவர் ராமதாஸ், காசி ஆகியோரை சரமாரி தாக்கி உள்ளனர்.மேலும் காசி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கல்லால் தாக்கி உள்ளனர் பின்னர் ராமதாஸ் பாக்கெட்டில் இருந்து செல்போன் மற்றும் 500 ரூபாய் எடுத்துக் கொண்டு சரமாரி தாக்குதல் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த கண்டக்டர் குமார் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story