சுருமான் பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூவர் கைது

கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருமான் பட்டி பகுதியில் பணம் வைத்த சூதாடுவதாக காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 6ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சுருமான் பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கடவூர் தாலுகா ராசாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 60, வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் வயது 48, சுருமான் பட்டியைச் சேர்ந்த அறிவழகன் வயது 30 ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Next Story