குமாரபாளையத்தில் மது விற்ற மூன்று பேர் கைது
கோப்பு படம்
குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதில் பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அங்குள்ள மூன்று வீடுகளில் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பொன்னம்மாள், 51, சின்னன், 73, ராமன், 74, ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story