அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது

அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது

சட்டவிரோத மது விற்பனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லோக்சபா தேர்தலையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குமாரபாளையத்தில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 57, என்பவர் மது விற்றுகொண்டிருந்தார்.

இவரை கைது செய்த போலீசார் இவரிடமிருந்து 69 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதே போல் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே மது விற்றுக்கொண்டிருந்த வட்டமலையை சேர்ந்த ஜீவா, 24, சந்தோஷ்குமார், 21, இருவரை கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story