கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

 விழுப்புரத்தில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.  

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீசார் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன், சங்கர் ஆகியோர் வழுதரெட்டி பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த 3 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள், விழுப்புரம் வழுதரெட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் மணிகண்டன் (வயது 21), பாண்டியன் நகரை சேர்ந்த கதிர்வேல் மகன் கோபிகண்ணன் (21), வழுதரெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் திராவிடமுரசு (24) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன் உள் பட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 10 கிராம் எடை கொண்ட 15 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களையும் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story