சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது. 17 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரசியா சுரேஷுக்கு தகவல் கிடைத்தது
. இந்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 12ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி ஆறு ரோடு பகுதியில், மது விற்பனையில் ஈடுபட்ட,வெஞ்சமாங் கூடலூரை சேர்ந்த முத்துச்சாமி என்கிற பபூன் வயது 66 என்பவரையும், இதே போல சின்ன தாராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளபாளையம், வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் வயது 53 என்பவரையும், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடைகாட்டுப்புதூர் பகுதியில், தென்னிலை, செஞ்சேரி வலசு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 38 என்பவரையும் கைது செய்து, இவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மொத்தம் 17 குவாட்டர் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.