தேனியில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது
கஞ்சா
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (35), கெப்புரங்கன்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகன் நாகபாண்டி(27), கம்பத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அஸ்வந்த் (25). இவர்கள் மூவரும் திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்றனர். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி அருகே தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிரபாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் கஞ்சா விற்பனை செய்த கம்பத்தைச் சேர்ந்த படித்துறை பரமன் என்பவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Next Story