விவசாய கிணற்றில் மின் மோட்டார் திருடிய மூவர் கைது
பாலாஜி,குபேந்திரன், குமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் கடந்த 29.10.23 ஆம் தேதி தனது நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்த மோட்டர் போனதாக ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விவசாய கிணற்றில் இருந்த மோட்டரை திருடி சென்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்காயம் காவல்துறையினர் ஆலங்காயம் - ஆசனாம்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்க்கொண்ட போது அவர்கள் மேல்அரசம்பட்டு பகுதியை சேர்ந்த பாலாஜி (21) குபேந்திரன் (18) குமார் (21) ஆகியோர் என்பதும் சரவணனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரை கொள்ளையடித்துச்சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.உடனடியாக மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆலங்காயம் காவல்துறையினர். அவர்களை ஆலங்காயம் காவல்நிலைய சிறையில் அடைத்தனர்.