கள்ளச்சாராயம் காட்சிய பெண் உட்பட மூவர் கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது... எண்ணூறு லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ... விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு.... சங்ககிரி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் காவல் ஆய்வாளர் ரஜினி, தனிப்படை போலீசார் திடீரென சங்ககிரி அருகேயுள்ள பறையங்காட்டானூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (39) சின்னமுத்து (61) தைலம்மாள் ( எ)தைலி(52) ஆகியோர் அவர்களது வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் 800 லிட்டர் சாராய ஊறல் ஆகியவைகளை சம்பவ இடத்திலேயே போலீசார் அழித்தனர். மேலும் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்ததோடு மூவரையும் சங்ககிரி காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சங்ககிரி அருகே 800 லிட்டர் சாராய ஊறலை அழித்ததோடு, விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து. ஒரு பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.