பெண்களிடம் நகை பறிப்பு வழக்கில் மூவர் கைது

பெண்களிடம் நகை பறிப்பு வழக்கில் மூவர் கைது

பெண்களிடம் நகை பறிப்பு வழக்கில் மூவர் கைது

ஊத்தங்கரை அருகே பெண்களிடம் நகை பறிப்பு வழக்கில் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல் பட்டி, மத்தூர் காவல் நிலையம், திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து நகை திருட்டு, இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடமிருந்து தங்க சங்கிலி பறிப்பு, பல்வேறு இடங்களில் திருட்டு குறித்து புகார் வந்த நிலையில் புகாரின் பேரில் ஊத்தங்கரை டி'எஸ்'பி பார்த்தீபன் உத்தரவின் பேரில் தனிப்பட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை போலீசார் நகை திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து பல்வேறு இடங்களில் விசாரணை செய்தும் சிசிடி கேமரா ஆய்வு செய்தும் வந்தனர்.

நேற்று ஊத்தங்கரை பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். விசாரணையில் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகன் வைரக் வயது (23), சந்தூர் அருகே உள்ள பட்ட கபட்டி பகுதியைச் சேர்ந்த பாலதண்டாயுதம் என்பவரின் சேர்ந்த ஜனா வயது (21) அதே போல் சந்தூர் அருகே உள்ள கொல்லஅள்ளி பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரின் மகன் திவாகர் வயது (30) என தெரிய வந்தது. இவர்கள் மூவர் மீதும் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story