திருட முயற்சித்த சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

திருட முயற்சித்த சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது

திருட முயன்றவர்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பி.கே. அகரத்தில் அதிகாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் ஒரு வீட்டில் திருட திருட முயன்றது தெரிய வந்தது.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே பி.கே அகரத்தில் அதிகாலையில் சிறுகனூர் காவல் ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் சந்தேகத்துக்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். இந்நிலையில் பி.கே. அகரம் வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் மர்ம கும்பல் ஒன்று திருட முயன்றதாக சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்க்கிடமான பிடித்த 3 பேரை விசாரணை செய்ததில் பி. கே.அகரத்தில் கிருஷ்ணன் வீட்டில் திருட முயன்றதும் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் செட்டியார் தெருவை சேர்ந்த 20 வயதான வெங்கடேஸ்வரன்,அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story