மூன்று பேருந்துகள் மோதி விபத்து
பாண்டி கோயில் ரிங் ரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்படுத்து.
பாண்டி கோயில் ரிங் ரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்படுத்து.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிகோவில் ரிங்ரோடு வழியாக செங்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன்பாக அதிவேகமாக சென்ற பைக் திடீரென சாலையில் நடுவே சென்றபோது அதன்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். பைபாஸ் சாலை என்பதால் அரசு பேருந்து பிரேக் பிடித்த அடுத்த நொடியிலயே பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்தும் அதன் பின்னால் வந்த திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தால் நல்வாய்ப்பாக ஓட்டுனர்களும், பயணிகளும் காயமின்றி தப்பிய நிலையில் விபத்து ஏற்பட்டபோது பயணிகள் அச்சத்தின் காரணமாக கூச்சலிட்டனர். மூன்று பேருந்துகளும் அடுத்தடுத்து மோதியதில் நடுவே சென்ற தனியார் பேருந்து முன் மற்றும் பின் பகுதிகளிலும் பலத்த சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கியது. இதனால் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் பேருந்துகள் மோதிய விபத்து குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story