திருச்சி : வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் மூன்று நாள் மாநாடு

திருச்சி : வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் மூன்று நாள் மாநாடு

வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் மூன்று நாள் மாநாடு

பல விஞ்சானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் புதுடெல்லியில் உள்ள இந்திய வைரஸ் ஆராய்ச்சி கழகம் இணைந்து, வைரஸ் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய மாநாடு இன்று திருச்சியில் துவங்கியது. இம் மாநாட்டில் மருத்துவம், விவசாயம், விலங்குகள், சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறையைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி விஞ்ஞானிகள், உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை டாக்டர் திலக்ராஜ் சர்மா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். புதுடெல்லியைச் சேர்ந்த தோட்டக்கலை அறிவியல் துணை இயக்குனர் ஜெனரல் மற்றும் பேராசிரியர் அனுபம் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆராய்ச்சி மாநாட்டில் உலக அளவில் வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பல்வேறுபட்ட ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து வைரஸ் ஆராய்ச்சியில் ஒன் ஹெல்த் கருத்தரங்கு மீது கவனம் செலுத்துவது பல்வேறு வாழ்க்கை வடிவங்களில் வைரஸ் நோய்களை நிர்வாகிப்பதற்கான மிகவும் விரிவான மற்றும் நிலையான அணுகுமுறையை வழிவகுக்கும் நோக்கில் செயல் பட உள்ளது‌என ஆராய்ச்சியாளர்கள் பேசினர்.

மேலும், முக்கிய விரிவுரைகள் முன்னணி விரிவுரைகள் சுவரொட்டி விளக்க காட்சிகள் ஆகியவையும் மருத்துவ உயர அலர்ஜி தாவர வைரலாஜி உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் கீழ் பல்வேறு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் பட்டுப்புழுவில் உள்ள வைரஸ்கள் மற்றும் பைட்டோ பிளாஸ்மா நோய்களுக்குப் பிரத்தியோக அமர்வுகள் திட்டமிட்டுள்ளனர். இமாநாட்டில் புகழ்பெற்ற வயராலஜி விஞ்ஞானிகள் பல்வேறு மாநில பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் காப்பிரைட் ஊழியர்கள் உட்பட சுமார் 500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story