தொழில்சார் சிகிச்சை குறித்த மூன்று நாட்கள் தேசிய மாநாடு
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், தொழில் சார் சிகிச்சை குறித்து, மூன்று நாட்கள் தேசிய மாநாடு நடந்தது. எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் நிதின் நகர்கர் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, அகில இந்திய தொழில் சார் சிகிச்சையாளர்கள் சங்கத்தின் தலைவர் பங்கஜ் பாஜ்பாய் பங்கேற்று, இந்த மாநாட்டை நடத்தும் அமைப்பாளர்களை பாராட்டினார். மாநாட்டின் ஆய்வு புத்தகத்தை அவர் வெளியிட, முதல் பிரதியை எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைவேந்தர் சத்யநாராயணன் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் மைதிலி, மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.