தென்காசி அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா
முப்பெரும் விழா
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முப்பெரும் விழா நடைபெற்றது. டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கருத்தரங்கம், தனியாா் மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஸ்தாபன ஒழுங்காற்று சட்ட பதிவு சான்று வழங்கும் விழா, ஸ்கேன் பரிசோதனை நிலையத்திற்கான பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடைபெற்றது.
மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து டாக்டா் பாலகணேஷ் பேசினாா். நலப்பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, டெங்கு நோய் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் பேசினாா்.
அரசு காட்டிய வழிமுறைகளை அரசு, தனியாா் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். அனைத்து தனியாா் மருத்துவமனைகளும், ஸ்கேன் பரிசோதனை நிறுவனங்களும் பதிவு சான்றுகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றாா் அவா். 35 தனியாா் மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றுகள் வழங்கப்பட்டன.