செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா

செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா 

குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன், நாச்சிமுத்து மற்றும் வள்ளல் சபாபதி ஆகியோரின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. செங்குந்த மகாஜன சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

முன்னாள் நாட்டாண்மைக்காரர் நந்தகுமார் செங்குந்த மகாஜன சங்க குலக்கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வள்ளல் சபாபதி, பாவேந்தர் பாரதிதாசன், .நாச்சிமுத்து ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியதாவது,

சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால் புரட்சிக்கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்பட்ட பாரதிதாசன், சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழ் இலக்கியம், கவிதை, நாடகம், கட்டுரை, கதை போன்றவைகளில் சிறப்புற விளங்கியவர். திருவாரூர் நாகப்ப சபாபதி முதலியார்

இளம்பருவம் முதலே கொழும்பு நகரோடு கைத்தறி துணி வாணிபம் பல ஆண்டுகளாக திறமையுடன் நடத்தி வந்த தம் தந்தையாருக்கு பெரும் துணையாக இருந்து வாணிபத்தை எல்லாம் நன்கு அறிந்து கொண்டார். செங்குந்தர்களின் பொருளாதாரம் உயர்த்த வேண்டும் என்ற உயர் எண்ணத்தில் தொழில்துறையில் பங்குதாரர்களாக செங்குந்தர்களையே இணைத்துக் கொண்டார். நாடெங்கும் சிதறுண்டு கிடந்த 72 கிளை நாட்டு செங்குந்தர்களையும் தாங்கள் பழம் பெருமை வாய்ந்த ஒரு பாரம்பரியத்தின் வாரிசுகள் என்பதை உணரச் செய்தவர் வள்ளல் சபாபதியார்.

நாச்சிமுத்து, கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். சென்னிமலையில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தை தனது முழு முயற்சியால் உருவாக்கினார். கூட்டுறவு சங்க அமைப்பு மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாரத்தை பெருக்குவதற்காக தனது முழு அர்ப்பணிப்பை செலுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், அறிவுக்கொடி, நடராஜன் , சண்முகம், முருகேசன், குருமூர்த்தி, கணேசன், ரங்கநாதன், மாணிக்கம், வேலுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story