கோவையில் திமுக சார்பில் முப்பெரும் விழா

கோவையில் திமுக சார்பில் முப்பெரும் விழா
முப்பெரும் விழாவிற்கு அடிக்கல் நாட்டல்
கோவையில் திமுக சார்பில் முப்பெரும் விழாவில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஜூன் 15 ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறும் முப்பெரும் விழா கூட்டத்திற்கு பந்தல் அமைக்க பூமி பூஜை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,நாடாளுமன்றத் தேர்தல் 40 தொகுதிகளின் வெற்றி விழா,

தேர்தல் வெற்றிக்கு காரணமான முதல்வருக்கு பாராட்டு விழா ஆகிய 3 விழாகளும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடத்தப்படுகின்றது. பூமி பூஜை நிகழச்சிக்கு பின் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சியின் காரணமாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதாகவும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.மத்தியில் அமைந்துள்ள அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காமல் இந்தியா கட்சியின் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.தேர்தல் அறிவிக்கபட்ட நிலையில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் தெரிவித்தார் எனவும் ஆளுங்கட்சியாக எந்த ஒரு விதிமீறலிலும் ஈடுபட வில்லை எனவும் கூறிய அவர் வடமாநிலங்களில் என்னென்ன பிரச்சனை நடைபெறுகிறது.

என்று அனைவருக்கும் தெரியும் என கூறினார். பெருவாரியான வாக்குகளை மக்கள் கொடுத்திருப்பதாகவும் இதற்குக் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த மக்கள் பணிதான் காரணம் எனவும் தெரிவித்தார். பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்தது தற்போது நிலைத்து வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது எனவும்தெரிவித்தார்.

திமுகவினரும்,திமுக கூட்டணியில் உள்ளவர்களும் கடுமையாக உழைத்திருப்பதன் காரணமாகவே இந்த மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது எனவும் இந்திய துணை கண்டத்தில் மாபெரும் வெற்றியாக இது இருக்கிறது என்றவர் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்கட்டமாக நன்றி அறிவிப்பு கூட்டம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார். மேற்கு மண்டலம் என பலர் பேசிக்கொண்டு இருந்தார்கள்,

தற்போது மொத்தமாக திமுக கையில் மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் அதனால் கோவையில் கூட்டம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கோவையில் பொது கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்த அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார் என்றும்,

இந்த கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அறிவுறுத்தி இருக்கின்றார் என தெரிவித்தார். வரும் 15 ம் தேதி சனிக்கிழமை மாலை கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்த அவர் 14 ம் தேதி நீலாம்பூர் அருகே கூட்டம்,

நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாகவும் மழைக்கான வாய்ப்பு இருப்பதன் காரணமாக சிரமம் ஏற்படும் என்பதால் கொடிசியா மைதானத்தில் பொது கூட்டம் நடத்தப்படுவதாகவும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story