டூவீலர்கள் மீது கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

டூவீலர்கள் மீது கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்
X

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மீது கார் மோதியவிபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மீது கார் மோதியவிபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டூவீலர்கள் மீது கார் மோதியவிபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், பி.என் ரோடு பகுதியில் வசிப்பவர் சிவபிரதீப், 29. சிப்காட் சூப்பர் வைசர். இவர் நேற்று காலை 10:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக குமாரபாளையம் அருகே ரெட்டியார் டீக்கடை பகுதியில் தனது ராயல் என்பீல்டு டூவீலரில் வந்த கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் வந்த மாருதி ஸ்விப்ட் கார் ஓட்டுனர் வேகமாக மோதியதில், இவரும், இவருக்கு முன்பு பஜாஜ் பிளாட்டினா டூவீலரில் சென்று கொண்டிருந்த குமாரபாளையம் அருகே முனியப்பன் கோவிலை சேர்ந்த சகோதரர்கள் கேசவன், 31, சிவராஜ், 34, ஆகிய இருவர், உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான, திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டி ராஜா, 42, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். --

Tags

Next Story