வாடகை காரை திருடிச் சென்ற மூன்று பேர் கைது

புதுக்கோட்டை இணையச் செயலி மூலம் கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றைத் திருடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை தைலாநகரைச் சேர்ந்தவர் கணேஷ். கட்டட வடிவமைப்பாளரான இவர், தனது சொகுசு கார் ஒன்றை ஜூம் இணையதளச் செயலியில் பதிவு செய்து வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார். மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த சூரஜ் (34), நாராணபுரத்தைச் சேர்ந்தசுரேஷ் (38) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் இவரது காரை ஜூம் செயலி மூலம் 6 நாள்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன்பிறகு காரைத் திரும்பக் கொண்டு வந்து தரவில்லை.

பல முறை அவர்களைத் தொடர்பு கொண்ட கணேஷ், இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து அந்த இருவரின் கைப்பேசி எண்களை ரகசியமாக கண்காணித்து போலீஸார், தனிப்படை அனுபபி இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோல பலரின் கார்களைத் திருடி, மதுரையிலுள்ள கோபாலகிருஷ்ணன் (45) என்பவரிடம் அடகு வைத்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். இம்மூவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story