தஞ்சாவூர் தொகுதியில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் தொகுதியில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல்
X

வேட்பாளர் வேட்புமனு 

தஞ்சாவூர் தொகுதியில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை ஒரே நாளில் மூன்று பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் தாக்கல் செய்ய அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக வேட்புமனுக்களை யாரும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தீபக் ஜேக்கப்பிடம் வழங்கினார். முன்னதாக தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைகளுக்கும், விஜயகாந்த் உருவபடத்துக்கும் மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக அதிமுக மற்றும் தேமுதிகவினரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆ

னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வேட்பாளரோடு சேர்ந்து 5 பேரை மட்டுமே உள்ளே அனுப்பினர். அதன்பிறகு தேமுதிக வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதே போல், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் மற்றும் பூதலூரைச் சேர்ந்த சுயேட்சையாக விஜயகுமார் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Tags

Next Story