ஒரே நாளில் மூன்று பேர் சிறையில் அடைப்பு
ஒரே நாளில் மூன்று பேர் சிறையில் அடைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று சமூகவிரோதிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடைய பிரபாகரன், சின்னத்துரை, இருதயராஜ் ஆகியோர் அடிதடி,கொலை முயற்சி உள்ளிட்டவைகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த மூன்று பேரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (மார்ச் 18) குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
Next Story