ஆசாரிபட்டறையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

ஆசாரிபட்டறையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

கோப்பு படம் 

ஆசாரிபட்டறையில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஆசாரிபட்டறை பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, புகலூர் தாலுகா, ஆசாரிப்பட்டறை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணன், மற்றும் நாமக்கல் மாவட்டம் வையப்ப பிள்ளை, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணிவேல், புகலூர் தாலுகா புன்னம் சத்திரம், எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story