ஆத்தூர் : மான்கறி சமைத்து சாப்பிட முயன்ற மூன்று பேர் கைது
ஆத்தூர் அருகே மான்கறி சமைத்து சாப்பிட முயன்ற மூன்று பேர் கைது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி பகுதியில் மான் கறி விற்பதாகவும், அதனை ஒரு சிலர் சமைத்து சாப்பிடுவதாகவும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனக்காளர்கள் முல்லை வாடி பகுதியில் சோதனை ஈடுபட்டனர். அப்போது முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (42), காசி என்கின்ற செந்தில்குமார் (40), ராஜா (33), விக்னேஷ் ஆகியோர் விக்னேஷ் வீட்டில் சமைப்பதற்காக மான் கறி ஒரு கிலோ வைத்திருந்த்து சோதனையில் தெரியவந்த்து. இதனை அடுத்து மூன்று பேரையும் கைது செய்து இவர்களுக்கு விற்பனை செய்த விக்னேஷ் தான் வைத்திருந்த 5 கிலோ கொண்ட மான் கறியுடன் தப்பியோட்டம். இதனையடுத்து ஒரு கிலோ மதிப்பிலான மான் கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் மூவரையும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Next Story