மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விஜயகுமாரி
சேலத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட மூவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
சேலம் மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்ட அழகாபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் எட்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கோரிமேட்டை சேர்ந்த சக்திவேல் முதல் முறையாகவும், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வரும் கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இரண்டாவது முறையாகவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.
Next Story