கரூர் அருகே 3 பேர் கைது

கரூர் அருகே 3 பேர் கைது

கோப்பு படம்

அபிராமி நகர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 18ஆம் தேதி மாலை 6 மணி அளவில், பூலாங்கள்ளி வலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகில் உள்ள அபிராமி நகர் அருகே உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட துக்காச்சி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், ஆரியூர், வள்ளுவர் நகரை சேர்ந்த கோபி, சசிகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாடுவதற்கு பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story