மொபைல்போன் பறிப்பு -மூன்று பேர் கைது

மொபைல்போன் பறிப்பு -மூன்று பேர் கைது

கோப்பு படம்

திருத்தணி அருகே மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரை சேர்ந்தவர் அபினேஷ், 19. இவர், திருவள்ளூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து நிறுவன பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். துாங்கிய நிலையில் திருவள்ளூரில் இறங்காமல், திருத்தணிக்கு வந்து விட்டார்.

பின், மீண்டும் வீடு திரும்ப வேலஞ்சேரி கூட்டு சாலையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று நபர்கள், அபினேஷை மிரட்டி, அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து சென்றனர். திருத்தணி போலீசார், விசாரணை நடத்தி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு, 26, செல்வம், 18, படவேட்டான், 19, ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story