புகையிலை பொருட்கள், மது விற்ற மூதாட்டி உள்ளிட்ட மூவர் கைது
சட்டவிரோத மது விற்பனை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள், மது ஆகியவை அதிகம் பல பகுதிகளில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், சந்தியா, எஸ்.எஸ்.ஐ. அமுல்ராஜ், முருகேசன், குணசேகரன், டேவிட், எட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
சத்யா புரி, நஞ்சப்பா லைன் ஆகிய இடங்களில் மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக பிரபு, 38, வேணுகோபால், 56, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தலா ஐந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக, வள்ளியம்மாள், 60, கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.