ஓசூரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில போலீசார் ஆலோசனை

ஓசூரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மூன்று மாநில போலீசார் ஆலோசனை : மாநில எல்லை பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேச்சு
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓசூரில் சேலம் சரக டி ஐ ஜி உமா தலைமையில் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா ஆகிய மூன்று மாநில போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி, கோலார் பகுதி காவல் கண்காணிப்பாளர் நாராயணா மற்றும் கேஜிஎப் காவல் கண்காணிப்பாளர் சாந்தராஜ், ஆந்திர மாநிலம் குப்பம் டிஎஸ்பி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரும் தமிழகத்தை சேர்ந்த மாநில எல்லை பகுதி காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவல் உதவி கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில எல்லைப் பகுதிகளில் கஞ்சா புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்கவும், ரவுடிசம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிக்கைகளை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்த காவல்துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் நேரத்தில் மூன்று மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மதுபான கடத்தல், பரிசு பொருள்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவற்றை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளையும் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்காக மூன்று மாநில எல்லைப் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. இந்த கூட்டத்தில் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போலீசார் மாநில எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதுகுறித்து ஆலோசனைகளையும் உயர் அதிகாரிகள் வழங்கினர்.

Tags

Next Story