சரக்கு ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி மாணவர்கள் படுகாயம்!
விபத்து
சரக்கு ஆட்டோ மீது ஸ்கூட்டர் மோதி 3 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது சரக்கு ஆட்டோவில் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அதன் பின்னால் ஸ்கூட்டரில் வந்த 2 கல்லூரி மாணவர்கள் திடீரென ஆட்டோவின் பின்னால் மோதினர்.
இதில் ஸ்கூட்டரின முன்பகுதி முழுவதும் நொறுங்கி மாணவர்கள் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த மாணவர்களை மீட்டு சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story