அகிலி கிராமத்தில் ஒரே நாளில் மூன்று கோவில் மகா கும்பாபிஷேக விழா

அகிலி கிராமத்தில் ஒரே நாளில் மூன்று கோவில் மகா கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

அகிலி கிராமத்தில் ஒரே நாளில் மூன்று கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பொன்னியம்மன், மற்றும் கங்கை அம்மன், மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கு ஒரே நேரத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் கால யாக சாலை பூஜையுடன் கணபதி பூஜை, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற வந்த நிலையில் இன்று நான்காம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை ,பூர்ணாவதி பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழுங்க கலச நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொன்னியம்மன், கங்கை அம்மன், மாரியம்மன் ஆகிய மூன்று விமான கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story