கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் கைது
கள்ளகுறிச்சி மாவட்டம், தேவபாண்டலம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாணவர் விடுதி அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் மாணவர்களிடம் கஞ்சா விற்பதற்காக அங்கு நின்றிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, தேவபாண்டலம் சக்திவேல் மகன் பரதன், 20; முருகன் மகன் சரவணன், 20; மைலம்பாறை சக்திவேல் மகன் பாரதி, 24; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story