நாகர்கோவிலில் அதிவேக பைக் பயணம் செய்த மூன்று வாலிபர்களுக்கு அபராதம் !

நாகர்கோவிலில் அதிவேக பைக் பயணம் செய்த மூன்று வாலிபர்களுக்கு அபராதம் !

விபத்து

வாலிபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன் மூன்று பேரும் தலை பாதுகாப்பு கவசம் அணியாமல் வந்த மூன்று வாலிபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அதிக சத்தம் எழுப்பியபடி வேகமாக ஒரு பைக் வந்தது. அதில் 3 பேர் தலைக்கவசம் அணியாமல் இருந்தனர்.

அந்த பைக்கை நிறுத்த எஸ் பி சைகைகாட்டியும் வேகமாக தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் நேற்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் டிராபிக் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேருடன் அதிவேகமாக வந்த பைக்கை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பைக்கை ஓட்டி வந்த வாலிபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன் மூன்று பேரும் தலை பாதுகாப்பு கவசம் அணியாமல் வந்தனர். அவர்கள் வந்த பைக்கில் சைலன்சர் அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் நேற்று முன்தினம் எஸ்.பி நிறுத்த உத்தரவிட்டும், தப்பி சென்ற வாகனம் இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து பைக் மற்றும் சம்மந்தபட்டவர்களை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய வயது இல்லாத நபருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த அவர்களது பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story