தியாகராஜர் ஆராதனை விழா முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் ஆய்வு
திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் பரப்பிரம்மத்தின் 177 ஆவது ஆராதனை விழா வருகின்ற ஜன.26 முதல் 30 வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறை போன்ற பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.குமார், வட்டாட்சியர் தர்மராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் ராமதாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராம் பிரபு, தியாக பிரம்ம சபை உதவி செயலாளர் டி.கே.ரவிச்சந்திரன், காவேரி பிரிவு நீர்வளத்துறை உதவி பொறியாளர் ப.அன்புச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story