மஹா தீபம் காண டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
மகா தீபம்
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், பரணி மற்றும் மஹா தீபம் காண, ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று துவங்குகிறது. இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா வரும், 26ம் தேதி காலை, 4:00 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண, 500 ரூபாய் கட்டணத்தில், 500 அனுமதி சீட்டுகள், அன்று மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் தரிசனம் காண, 600 ரூபாய் கட்டணத்தில், 100 அனுமதி சீட்டுகள், 500 ரூபாய் கட்டணத்தில், 1,000 அனுமதி சீட்டுகள், https:/ annamalaiyar.hrce.tn.gov.in, என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணைய தளம் வழியாக இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கட்டண சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் இ - மெயில் வழியாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பரணி தீப தரிசனத்துக்கு வருவோர், 26ம் தேதி அதிகாலை, 2:00 முதல், 3:30 மணி வரை; மஹா தீப தரிசனத்துக்கு, மதியம், 2:30 முதல், 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அசல் கட்டண சீட்டு மற்றும் ஆதார் கார்டுடன், கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்திற்குள் வராவிட்டால், கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story