தொழிலாளிக்கு அட்டைபெட்டியை வைத்து கட்டு: பரமக்குடியில் அலட்சியம்
சிகிச்சைக்காக பழைய அட்டை பெட்டி
அட்டைப்பெட்டி வைத்து கட்டுப்போட்டுள்ள தொழிலாளி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சௌகத் அலி தெருவில் ஒரு புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இன்று மாலை சிமெண்ட் காங்கிரீட் போடப்பட்டுள்ளது. இன்று மாலை செய்த ஒரு மணி நேர கனமழையால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பின்பு சிமெண்ட் காங்கிரீட் போடும் பணிகள் மீண்டும் நடைபெற்றுள்ளது. அப்போது அருகில் உள்ள வீட்டில் பக்கவாட்டு சுவர் புதிய வீட்டில் கட்டுமான பணியின் மீது விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிமெண்ட் காங்கிரட் விழுந்துள்ளது. இதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.
கட்டிட இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தெளிசாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரின் வலது கால் இரண்டாக உடைந்தது. சிமெண்ட் காங்கிரீட் விழுந்த விபத்தில் அருளானந்தம்,58,. காளிமுத்து,35,. அலெக்ஸ், 46,. ஆகிய மூன்று நபர்கள் படுகாயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிமெண்ட் காங்கிரட் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருளானந்தம் என்பவரின் வலது கால் இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த காலுக்கு மரக்கட்டை அல்லது இரும்பு பிளேட் வைத்து இறுக்கமாக கட்டி முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அட்டைப்பெட்டியை வைத்து உடைந்த காலை சேர்த்து வைத்து இறுக்கமாக கட்டியுள்ளனர். ரத்தம் கசிய கசிய அட்டைப்பெட்டி ஊரி நொந்து போய்விடும்.இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் வலியில் துடித்த அருளானந்தத்திற்கு அவசர அவசரமாக மரக்கட்டை அல்லது இரும்பு பிளேட் வைத்து காலை சேர்த்து கட்டாமல் அட்டைப்பெட்டியை வைத்து அலட்சியமாக கட்டுப்போட்டு உள்ளனர்


