முள்ளம்பன்றி தாக்கி புலி பரிதாபமாக உயிரிழப்பு

முள்ளம்பன்றி தாக்கி புலி பரிதாபமாக உயிரிழப்பு

பேச்சிப்பாறை அருகே புலி தாக்கி இருவர் படுகாயம் அடைந்த நிலையில் முள்ளம்பன்றி தாக்கியதில் புலி பரிதாபமாக உயிரிழந்தது.


பேச்சிப்பாறை அருகே புலி தாக்கி இருவர் படுகாயம் அடைந்த நிலையில் முள்ளம்பன்றி தாக்கியதில் புலி பரிதாபமாக உயிரிழந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சி பாறையை அடுத்த ஆண்டி பொற்றை பகுதியை சேர்ந்தவர் ஜெயன். இவர் தோட்டங்களில் அன்னாசி பழம் நடும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். சேனங்கரை பகுதியில் வந்த போது அருகில் இருந்த பாறையில் இருந்து புலி ஒன்று திடீரென ஜெயன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் பாய்ந்து அவரை தாக்கியது. இதில் ஜெயன் கூச்சலடவே அந்த புலி அங்கிருந்து தப்பி ஓடி அருகே ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளி பூதலிங்கம் என்பவரை கடுமையாக தாக்கியது. இதில் உடல் முழுவதும் ரத்த காயம் ஏற்பட்டு அவர் அலறி துடித்தார் பின்னர் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இந்த நிலையில் புலி அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்து இறந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்னர் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் புதிய பார்த்தபோது புலியின் உடலில் முள்ளம் பன்றியின் முட்க்கள் இருந்தது தெரிய வந்தது.

முன்னதாக புலியை முள்ளம்பன்றி தாக்கிய நிலையில் ஆவேசத்தில் ஓடிய புலி இருவரையும் தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தியதில் புலியின் உடலில் காயம் ஏற்பட்டு புலி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. புலி தாக்கி காயமடைந்த இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலித்தாக்கி தொழிலாளி இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story