மர வியாபாரி தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
காவல்துறை விசாரணை
நல்லம்பள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோடு பகுதியில் மர வியாபாரி தற்கொலை அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பழனி மகன் ஜெயபாண்டியன் மர வியாபாரி. திருமணம் ஆகவில்லை. குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் நேற்று ஜெய பாண்டியன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற அதியமான் கோட்டை காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story