அண்ணாமலை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை-அதிமுக வேட்பாளர்

அண்ணாமலை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை-அதிமுக வேட்பாளர்

 அண்ணாமலை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என கோவை அதிமுக வேட்பாளர் கூறினார். 

அண்ணாமலை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என கோவை அதிமுக வேட்பாளர் கூறினார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சின்னியம்பாளையம், நீலாம்பூர், முதலிபாளையம்,முத்து கவுண்டன்புதூர்,கிட்டாம் பாளையம்,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த சிங்கை ராமச்சந்திரன் கருமத்தம்பட்டி பகுதியில் திரண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பேசினார்.அப்போது பேசிய அவர் அதிமுகவில் சாமானிய நபர் ஒருவர் உயர்ந்த பதவிக்கு செல்ல முடியும் என்பதற்கு தானும் ஒரு எடுத்துக்காட்டு எனவும் சிங்காநல்லூர் பகுதியில் பிறந்து வளர்ந்த நான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கோவைக்கு தேவையான திட்டங்களை மத்திய ஆட்சியாளர்களிடம் கேட்டுப் பெறுவேன் எனவும் விசைத்தறி மற்றும் கைத்தறி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் என்றார்.

திமுக ஆட்சியாளர்களைப் போல அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்ற அவர் கல்வி கடன் மற்றும் நகை கடன் ரத்து என பொய் வாக்குறுதிகளை வழங்க மாட்டேன் என தெரிவித்தார்.திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆன நிலையில் மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிங்கை ராமச்சந்திரன் கோவை புறநகரில் அதிக அளவில் விசைத்தறி தொழில்கள் உள்ள நிலையில் ஜிஎஸ்டி, மின் கட்டண உயர்வாள் 50 சதவீத தொழில் மட்டுமே நடைபெற்ற வருகிறது. பெரும்பாலானோர் விசைத்தறிகளை எடைக்கு விற்கும் நிலை இருந்து வருகிறது.

விசைத்தறியாளர்கள் பிரச்சினை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவை வைத்து அண்ணாமலை தற்போது அரசியல் செய்து வருகிறார்.நான் எம்எல்ஏ கோட்டாவில் சீட்டு வாங்கியதாக பேசிய அண்ணாமலை என் தந்தை குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற பேச்சு அவரது தரம் என்ன என்பதை காட்டுகிறது. களத்தில் இல்லாத அண்ணாமலை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிப்பதற்கு தெளிவாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story