திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் 2024-25-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம், பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கும், என்.சி.சி. சார்ந்தவர்களுக்கும் நடக்கிறது.
இதை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி பி.எஸ்சி. (கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர்சயின்ஸ், புள்ளியியல் ) ஆகிய படிப்புகளுக்கும், 11-ந்தேதி பி.காம் மற்றும் பி.பி.ஏ., 12-ந்தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பட்டப்படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது,
இந்த கலந்தாய்வில் பங்கேற்க வருபவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 2 நகல்கள், மாற்றுச்சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் தலா 2 நகல்கள், ஆதார் அட்டை 2 நகல்கள், புகைப்படம், உரிய சேர்க்கை கட்டணம் உள் ளிட்டவற்றுடன் வருகை தர வேண்டும். மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் அ.ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.