ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வழங்கினார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்ததோடு, அங்குள்ள உள் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story