விக்கிரவாண்டியில் சாலையில் டிப்பர் கவிழ்ந்து விபத்து
விபத்து
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் சாலையில் டிப்பர் கவிழ்ந்து விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் டிரைவர் குமார் வயது 50). இவர் மதகடிப்பட்டில் இருந்து கரும்பு லோடு அடிப்பதற்கான 2 புதிய டிப்பர்களை டிராக்டரில் இணைத்து ஓட்டிச் சென்றார். நேற்று காலை 10 மணியளவில் விக் கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து வராகநதி ஆற்றுப்பாலம் அருகே வந்த போது, 2-வது டிப்பரின் ஹூக் திடீரென கட்டானது. இதில் தாறுமாறாக ஓடிய டிப்பர் சாலையில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதுபற்றிய தகவலறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுங்கச்சாவடி ஊழியர்கள் உதவியுடன் கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்த டிப்பரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story