டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்!

டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்!

ஓட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சை டிரைவர் போராடி சாலை ஓரமாக நிறுத்தி 30 பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.


ஓட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சை டிரைவர் போராடி சாலை ஓரமாக நிறுத்தி 30 பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை, கீழமங்கலம், குலசேகரநல்லூர், ஓட்டப்பிடாரம் வழியாக புதியம்புத்தூர் சென்றது. அந்த பஸ் மீண்டும் புதியம்புத்தூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ்ஸை டிரைவர் பால்மணி ஓட்டி சென்றார். இந்த பஸ் பசுவந்தனை அருகே சென்றபோது, திடீரென முன்னால் உள்ள வலதுபுற டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில விநாடிகளில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியடைந்து அலறினர். ஆனாலும் டிரைவர் கடும் சிரமத்திற்கு இடையே போராடி, அரசு பஸ்ஸை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சாலைஓரமாக நிறுத்தினார்.

இதனால் அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். பஸ்சில் இருந்த பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடியாக பஸ்சில் இருந்து வேகமாக இறங்கி ஓடினர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், விபத்தில் இருந்து 30 பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story