சின்ன மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
எடப்பாடி அடுத்த வெள்ளநாயக்கன்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
எடப்பாடி அருகே ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக் கூட ஊர்வலம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளார்நாயக்கன்பாளையத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆவணி பேரூர் மேல்முகம் கிராமம் வெள்ளார்நாயக்கன் பாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ சின்ன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்குப் புரைவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தீர்க்க க்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக பல்வடங்கும் காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்துக்கொண்டு எடப்பாடி ஜலகண்டாபுரம் செல்லும் சுற்று புறவழிச் சாலையில் இருந்து பம்பை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வெள்ளார்நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அப்போது பம்பை மேளத்திற்கு ஏற்ப குதிரை நடனமாடிய இக்காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்ரீ சின்ன மாரியம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்..