வைகாசி விசாகம் : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அர்த்தநாரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் செங்கோட்டு வேலவருக்கு கொடியேற்றமும், பின் தங்க கொடிமரத்தில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரருக்கு கொடியேற்றமும் முதல் நாள் நிகழ்வாக மிக விமர்சையாக துவங்கியது.
இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மங்கள வாத்தியம் மற்றும் சிவபக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் கோவில் அறங்காவலர் குழ தலைவர் தங்கமுத்து, கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன், கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வர் நவீன் ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன்,பிரபாகரன், அருணாசங்கர், அர்ஜுனன் உள்பட திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்